பீட்சா வாங்கித் தருவதாக ஏமாற்றி 10-ஆம் வகுப்பு மாணவியை நண்பர்களோடு சேர்ந்து சீரழித்த வீட்டு உரிமையாளரின் மகன்.!



girl raped with lure of pitza

பாதிக்கப்பட்ட அந்த பத்தாம் வகுப்பு மாணவி டெல்லி கல்யாணபுரி நகரில் தனது குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அரசு பள்ளியில் பயின்று வரும் அந்த மாணவியை பீட்சா வாங்கி தருவதாக ஏமாற்றி வீட்டின் உரிமையாளரின் மகன் தன் நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் வீட்டின் உரிமையாளரின் பையன் அவளுக்கு பீட்சாவை வாங்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். வினோத் நகரில் தனது நண்பனின் வீட்டில் பீட்சா வாங்கி வைத்திருப்பதாக கூறி அந்த பெண்ணை அங்கு அழைத்துச் சென்றுள்ளான் 28 வயது நிரம்பிய அந்த வீட்டு உரிமையாளரின் பையன். அவனுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது.

girl raped with lure of pitza

பீட்ஷாவிற்கு ஆசைப்பட்ட அந்த ஏழைச் சிறுமியும் வீட்டு உரிமையாளரின் பையனுடன் அவனின் நண்பனின் வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கு வீட்டு உரிமையாளர் பையனின் நண்பர்கள் மூன்று பேர் ஏற்கனவே தயாராக இருந்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த மூவருடன் வீட்டு உரிமையாளரின் பையனும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

girl raped with lure of pitza

மேலும் அவர்கள் இதைப் பற்றி வெளியில் கூறினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறுமியை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். வேதனையுடன் வீடு திரும்பிய அந்த சிறுமி தனது தாய் வேலையை முடித்து வீட்டிற்கு வந்த உடன் நடந்த எல்லாவற்றையும் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனால் பதறிப்போன இந்த சிறுமியின் தாய் அருகில் இருந்த காவல் நிலையத்தில் அந்த நான்கு பேரையும் பற்றி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அந்த நான்கு பேரையும் அன்றே கைது செய்தனர்.