உங்க வீட்டு ஃபிரிட்ஜில் இந்த பொருட்கள் இருக்கின்றதா? உடனே வெளியில் போட்ருங்க இல்லையெனில் உயிருக்கே ஆபத்து!

இப்போது பெரும்பாலான வீடுகளில் நேரம் மிச்சப்படுத்தும் நோக்கில் ப்ரிட்ஜ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எல்லா உணவுகளையும் ப்ரிட்ஜில் வைக்கலாமா என்ற கேள்விக்கு பதில் இல்லை. சில பொருட்களை ப்ரிட்ஜில் வைப்பது உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
ப்ரிட்ஜில் வைக்கக்கூடாத மசாலா வகைகள்
மசாலாப் பொருட்கள் எளிதில் காலாவதியாகி விடும். குறிப்பாக, திறக்கப்பட்ட கெட்ச்அப், மயோனெய்ஸ், கடுகு சாஸ், சோயா சாஸ் போன்றவை சில நாட்களுக்குப் பின் பாக்டீரியா வளர்ச்சியால் கெட்டுப்போகும். இவற்றை பயன்படுத்தும் முன் வாசனை மற்றும் நிறம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சமைத்த உணவுகளுக்கு கால வரம்பு
சமைத்த உணவுகள் ப்ரிட்ஜில் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அதற்குப் பிறகு பாக்டீரியா வளர்ந்து அது விஷம் போல் மாறும். அதனால் 3 நாட்கள் கடந்த உணவை உட்கொள்வது ஆபத்தானது.
இதையும் படிங்க: அழுக்கு படிந்த நகையை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? தக்காளியை வைத்து இப்படி செய்யுங்கள்! சூப்பர் டிப்ஸ் இதோ...
பழுத்து அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள்
அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ப்ரிட்ஜில் வைக்கப்படும்போது, அவை மற்ற உணவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பூஞ்சை பிடித்த உணவுகள் துர்நாற்றம் வீசும். அதனால் அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
பால், தயிர், பன்னீர், வெண்ணெய் போன்றவை எளிதில் கெட்டுப்போகும். அவற்றின் expiry date-ஐ பார்த்து பயன்படுத்த வேண்டும். கெட்டுப் போன பால் பொருட்கள் வயிறு பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
இறைச்சி மற்றும் கடல் உணவுகள்
பச்சை இறைச்சி மற்றும் மீன் போன்றவை ப்ரிட்ஜில் அதிகபட்சம் 1-2 நாட்கள் மட்டுமே வைக்கவேண்டும். நிறம் மாறுதல் அல்லது புளிப்பு வாசனை ஏற்பட்டால் உடனே அகற்ற வேண்டும்.
ஜாம் மற்றும் ஊறுகாய்
திறந்த ஜாம் மற்றும் ஊறுகாய்களை நீண்ட நாட்களுக்கு ப்ரிட்ஜில் வைப்பது பூஞ்சை வளர்ச்சி மற்றும் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
முட்டை மற்றும் மருந்துகள்
காலாவதியான முட்டைகள் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்தும். முட்டையை தண்ணீரில் போட்டு சோதனை செய்யவும். மிதந்தால் அது கெட்டுப்போனது என அறியலாம்.
மருந்துகள் ப்ரிட்ஜில் வைத்தால், அதன் வீரியம் குறையும். காலாவதியான மருந்துகளை உடனே அகற்றவேண்டும்.
சட்னி மற்றும் தோசை மாவு
வீட்டில் தயாரித்த சட்னி மற்றும் தோசை மாவு, ப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்தால் புளிப்பு மற்றும் பூஞ்சை ஏற்படும். இது மற்ற உணவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.
ப்ரிட்ஜில் உணவுகளை வைப்பதற்கான புதிய பழக்கங்கள், நமக்கு நன்மையை அளிக்கலாம். ஆனால் தவறான பொருட்களை ப்ரிட்ஜில் வைத்தால் அது உயிருக்கே ஆபத்தாக மாறும். எனவே உணவுகளை ப்ரிட்ஜில் வைக்கும் முன் அவற்றின் இயல்புகளையும் காலாவதி தேதியையும் கவனிக்க வேண்டும்.
இதையும் படிங்க: Optical illusion: உங்கள் கண்களுக்கும் மூளைக்கும் ஒரு சோதனை! இதில் என்ன மிருகம் தெரிகிறது?