"ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான ஐந்து சூப்பர் உணவுகள்!"

"ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான ஐந்து சூப்பர் உணவுகள்!"


Foods for healthy lifestyle

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காலை உணவு மிகவும் முக்கியமானதாகும். எனவே காலை உணவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். காலையில் சாப்பிட வேண்டிய 5 உணவுகளை இங்கு பார்ப்போம்.

Healthy

நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 நிறைந்துள்ள சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தயிரில் கலந்து ஒரு ஸ்மூத்தியாக உண்ணலாம். தண்ணீரில் ஊறிய சியா விதைகள் விரிவடைந்து பசைத்தன்மை கொண்டதாக மாறுகிறது. எனவே இது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்துகிறது. 

மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவான அவகேடோவை காலை உணவாக சாப்பிட்டால், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கிய மஞ்சள் செரிமானத்திற்கு உதவுவதோடு அல்லாமல், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.

Healthy

ஆப்பிள் சீடர் வினிகரை அளவாக காலையில் உட்கொள்வதால், கொழுப்பைக் கரைக்கும். மேலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். காபி அல்லது தயிரில் சிறிது லவங்கப்பட்டைத் தூளை தூவி குடித்து வர, உடல் எடை குறையும். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.