ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்... புது விதமான இடித்து அரைத்த மீன் வறுவல் செய்வது எப்படி.?

ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்... புது விதமான இடித்து அரைத்த மீன் வறுவல் செய்வது எப்படி.?



Fish fry recipe in Tamil

மீன் வறுவல் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியான மீன் வறுவலை சற்று வித்தியாசமாக இடித்து அரைத்து மீன் வறுவல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ 
சிறிய வெங்காயம் - 6 
மல்லி - 1/2 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
வர மிளகாய் - 10 
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு 
எலுமிச்சை - 1

Fish fry

முதலில் ஒரு மிக்ஸியில் வெங்காயம், வர மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வர மிளகாய், சோம்பு, சீரகம், மல்லி, மிளகு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மீனில் மசாலா கவலையை தடவி ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் கடாயில் ஊற்றி சூடானதும் மீனை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் வறுவல் தயார்.