சிக்கன்,மட்டனை போன்று சுவையான மீன் பிரியாணி மணமணக்க செய்வது எப்படி...

சிக்கன்,மட்டனை போன்று சுவையான மீன் பிரியாணி மணமணக்க செய்வது எப்படி...


Fish biriyani recipe

ஓட்டல் போகாமல் வீட்டிலேயே மணமணக்க சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மீன் - 1/4 கிலோ 
அரிசி - 2 டம்ளர்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய்-2
பட்டை வகைகள்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு

முதலில் வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

Fish biriyani

அதனுடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.பின்னர் தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு மீனையும் சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள்,புதினா,கொத்தமல்லி சேர்க்கவும்.

அதன்பின் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து நன்கு கலக்கவும். அரிசி முக்கால் பங்கு வெந்ததும் தம் போட்டு இறக்கி விட வேண்டும். அரை மணி கழித்து ஒபன் செய்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி தயார்.