உறவு சிக்கல்களை தவிர்க்க முடியாமல்.. தவிக்கிறீர்களா.? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.!
மனித வாழ்வில் பணத்தினை விட சொந்தங்கள், மனிதர்கள் முக்கியம் என்பதை கோவிட் காலம் நமக்கு சிறப்பாக உணர்த்தியது. அந்த இக்கட்டான நேரத்தில் மனிதமும், ஒருவருக்கொருவர் செய்யும் உதவியும் மட்டுமே பல உயிர்களைக் காப்பற்ற கை கொடுத்தது. உறவுகள் இன்றி மனித பயணமே சாத்தியப்படாது என்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கலாம்.
தனிமை மன அழுத்தத்தையும் , வெறுப்பயும் உருவாக்கும் நிலையிலும் நம் குடும்ப உறவுகள், நண்பர்கள் அந்த எதிர்மறை சிந்தனையை விலக்கி நமக்கு நம்பிக்கையையும், மகிழ்வினையும் கொடுக்கும் மாமருந்தாய் இருக்கின்றனர். இவ்வளவு அற்புதமான இந்த உறவுகளை மேம்படுத்த கீழ்க்காணும் விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்.
நிச்சயமற்ற இந்த வாழ்வில் நாம் காட்டும் அன்பும், நமக்கு காட்டப்படும் அன்பும் மிக வலிமை மிக்கது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!
'நானே பெரியவர்!', 'நான் சொல்வது மட்டுமே சரி.!' என பிறர் கருத்தை ஏற்று கொள்ளாமல் இருத்தல் கூடாது.
அசாதாரணமான சூழலில் பிறரின் கருத்தில் இருக்கும், அவர் தரப்பு நியாயத்தை முதலில் புரிந்துகொள்ள முயலவேண்டும். பல நேரங்களில் விட்டுகொடுக்கும் நபராக நாம் இருக்கும் போது அந்த உறவில் எந்த ஒரு தொய்வும், சங்கடமும் நேராமல் தடுக்கலாம்.
அடுத்தவர் வீட்டு விஷயங்கள் மற்றும் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது அவசியம். அங்கு, இங்கு என மாற்றி மாற்றி கருத்துக்களை பேசி பரிமாறுதல் கூடாது.

நாம் ஒவ்வொருவரும் அவரவருக்கான வரைமுறை, எல்லை அறிந்து செயல்பட வேண்டும். அடுத்தவர்களின் சொந்த விவகாரங்களுக்கு நீங்கள் வழக்காடக்கூடாது.
உறவினர்களுக்குள் ஏதேனும், மனக்கசப்பு எனில் அற்ப காரியங்களுக்காக கோபப்படாமல் நிதானமாக கடந்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
வீணான நம் கோபத்தினால் மோசமான விளைவுகள் மட்டுமே ஏற்படும் என்பதை அறிந்து விலகி வேறு காரியங்களில் நாட்டம் செலுத்தவேண்டும்.
உறவினர் வீட்டின் விசேஷங்கள், மருத்துவத்தேவை மற்றும் துக்கத்தின் போது அவர்களுக்கு ஆதரவாய் நிற்க முயற்சி செய்யவேண்டும். இது உறவுகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் அவர்களுடனான பிணைப்பினையும் பலப்படுத்தும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் கண் மை.! இவ்வளவு ஆபத்தா.? பெற்றோர்களே, உஷார்.!