செல்லப்பிராணிக்கு செல்லமாக சரக்கு ஊற்றி பழக்கப்படுத்திய நபர்.. உரிமையாளர் இறந்ததால் நாய்க்கு வந்த சோகம்.!

செல்லப்பிராணிக்கு செல்லமாக சரக்கு ஊற்றி பழக்கப்படுத்திய நபர்.. உரிமையாளர் இறந்ததால் நாய்க்கு வந்த சோகம்.!


England Dog Drinks Alcohol

மனிதன் தன்னுடன் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணிக்கு தன்னால் இயன்ற, தான் சாப்பிடும் உணவை கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இதில் உடலை சீரழிக்கும் மதுபழக்கத்திற்கு அடிமையாகும் சிலர், தனது செல்லப்பிராணிக்கும் அதனை கொடுத்து பழக்கப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச்சார்ந்த நபர் மதுபோதைக்கு அடிமையான நிலையில், அவரின் இரண்டு வயதாகும் லேப்ராடர் நாய்க்கு முன்பு அமர்ந்தவாறு மதுபானம் குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளார். 

England

அவர் போதை ஏறி சென்றபின்னர் நாயும் அவரைப்போல குடித்து பழகிய நிலையில் உரிமையாளர் இறந்தபின்னும் மதுவுக்கு அடிமையாக இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் நாயை மீட்டு மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.