மழைக்காலம் ஆரம்பம்.. உயிரே போகக்கூடிய ஆபத்து.! இதை சரி செய்துவிட்டிர்களா.?!



electrical repair before mansoon

மின்சாரம் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. ஆனால், அதைப் பயன்படுத்தும் போது சிறிதளவு கவனக்குறைவாக இருந்தால் கூட பெரும் ஆபத்து ஏற்படலாம். குறிப்பாக மழைக்காலங்களில் மின்சார சாதனங்களும், சுவிட்ச் போர்டுகளும் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
சுவிட்ச் போர்டில் மின்சாரம் பாய்வதற்கான முக்கிய காரணம் தளர்வான வயர்கள், தவறான இணைப்புகள், அல்லது உடைந்த போர்டுகள் தான். 

இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டால் மின்சாரம் வெளியேறி ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, மின்சார சாதனங்களின் வயர்கள் முறையாக இணைக்கப்பட்டுள்ளனவா என்று அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். சுவிட்ச் போர்டுகளை தொடுவதற்கு முன் மின்சாரம் அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.

electrical

ஈரமான கைகளால் அல்லது வெறும் கைகளால் சுவிட்ச் போர்டுகளை தொடக்கூடாது. சாத்தியமானால் கையுறை மற்றும் ரப்பர் செருப்பு அணிந்து செயல்படுங்கள். இதனால் மின் அதிர்வு ஏற்படும் அபாயம் குறையும். சுவிட்ச் போர்டுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுவது அவசியம். தூசி, அழுக்கு அல்லது நீர் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய போர்டுகள் உடைய நிலையில் இருந்தால் உடனே மாற்றி விடுங்கள். 

இதையும் படிங்க: ஸ்லோ பாய்சனா.? சோஷியல் மீடியாவா.? கொஞ்சம் விழித்து பாருங்க.! 

இப்போது “ஷாக் புரூஃப்” எனப்படும் பாதுகாப்பான சுவிட்ச் போர்டுகள் சந்தையில் கிடைக்கின்றன; அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
மின்சார பிரச்சினை மீண்டும் மீண்டும் தோன்றினால் அல்லது ஆபத்து அதிகமாகத் தெரிந்தால் உடனே தகுதியான எலெக்ட்ரீஷியனை (Electrician) அழைத்து சரி செய்யுங்கள். சிறு கவனமே பெரிய விபத்திலிருந்து நம்மை காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.