குட்டீஸ்க்கு பிடித்த முட்டை சமோசா.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.! 

குட்டீஸ்க்கு பிடித்த முட்டை சமோசா.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.! 



egg samosa recipe for kutties

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முட்டை சமோசா செய்வது எப்படி என்று இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

சீரகம் - 1/4 தேக்கரண்டி 
முட்டை - 2 
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
கோதுமை மாவு - 100 கிராம் 
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
மிளகுத்தூள் - தேவைக்கு ஏற்ப 
உப்பு - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி - சிறிதளவு 
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

Lifestyle

செய்முறை :

★முதலில் கோதுமை மாவில் 2 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

★பின் சின்ன வெங்காயம் மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

★அடுத்து சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்து பசை போல கலக்கி கொள்ளவும்.

★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து பொரித்து சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

★வெங்காயம் பாதி வதங்கியபின், கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகு பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி பின் முட்டையை  உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

★பின் மசாலா பச்சை வாசனை போனவுடன், முட்டை உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

★அடுத்து பிசைந்த சப்பாத்தி மாவை மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தீத்தி முக்கோண வடிவில் செய்து, நடுவில் செய்துவைத்த முட்டை மசாலாவை சேர்த்து கோதுமை மாவு பிசையினை வைத்து ஓரங்களை ஒட்டி விட வேண்டும். 

★இறுதியாக வானிலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக எடுத்தால் முட்டை  சமோசா தயாராகிவிடும்.