மக்களே கவனம்.. சாப்பிடும் போது செல்போன் பார்க்கும் பழக்கமுடையவரா நீங்கள்?..! 

மக்களே கவனம்.. சாப்பிடும் போது செல்போன் பார்க்கும் பழக்கமுடையவரா நீங்கள்?..! 



eating-time-phone-viewers-awareness

 

தற்போதைய காலகட்டத்தில் உண்ணும்போது செல்போன் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். சிலர் சாப்பிடும்போது செல்போன் பார்த்துக்கொண்டோ அல்லது யாரிடமாவது பேசிக்கொண்டோ சாப்பிடுவதை தனக்கு மட்டுமல்லாமல், தங்களது குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் நமது வேலைகளை சீக்கிரம் முடிப்பதற்காக சாப்பிடும்போதும் ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறோம்.

இந்த பழக்கம் உடலில் குணப்படுத்த முடியாத சில பிரச்சனைகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் செல்போனில் ஏதாவது பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் அளவுக்கு அதிகமாக உணவை உண்கிறோம். இது உடலினுள் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுவதாவது, "உண்ணும் உணவை அளவறிந்து உண்ண வேண்டும். அளவிற்கு அதிகமாக உண்டால் அது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

health tips

மேலும் வயிறு வலி, மலச்சிக்கல் உள்ளிட்டவையும் ஏற்படும். அளவுக்கு குறைவாக உண்பதும் உடலுக்கு நல்லதல்ல. உண்ணும் உணவை நன்கு பசித்த பின் அளவறிந்து உண்ண வேண்டும். அதேபோல காலையில் உண்ணும் உணவை விட மதிய வேளையில் சற்று குறைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அதைவிட சற்று குறைவாகவே உண்ண வேண்டும்" என்கின்றனர். 

ஆனால் நாமோ செல்போனை பார்த்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். இப்படி செய்வதால் நமது உடலில் செரிமான பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளும் ஏற்படும். எனவே உண்ணும் போது தொலைக்காட்சி, செல்போன் உள்ளிட்டவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.