பசி எடுக்க மாட்டேங்குதா உங்களுக்கு? இத ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள் கொலைப் பசி எடுக்கும்!

பசி எடுக்க மாட்டேங்குதா உங்களுக்கு? இத ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள் கொலைப் பசி எடுக்கும்!



eat-this-food-for-not-hungry

தற்போதைய வாழ்க்கை முறையில் பசியின்மை பிரச்சனை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. பசியின்மையை போக்கும் ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிட வேண்டும் என்ற அளவிற்கு பசி எடுக்க வைக்கும் உணவாக திகழ்வது பிரண்டை. இந்தப் பிரண்டையை யாரும் பயிரிட்டு வளர்ப்பதில்லை. இது தானாக முட்செடிகளிலும், காடுகளிலும் படரும் தாவரம் ஆகும். 

 இந்தப் பிரண்டை பசியைத் தூண்டுவது மட்டுமின்றி, எலும்பு வலிக்கு மிகவும் சிறந்த மருந்தாகும். இந்த பிரண்டை தண்டுகளில் உள்ள நார்களை நீக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் செரிமானமடைந்து அதிகப்படியான பசியை தூண்டும். 

hungry child

 இந்த பிரண்டையை சாப்பிடுவதால் எலும்பு முறிவு, அடிப்பட்ட வீக்கம் போன்றவை நீங்கும். பிரண்டையை அரிசியுடன் சேர்த்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி நீங்கும். 

 பிரண்டையில் காரம் சேர்க்காமல் அரிசி கலந்து வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு போன்றவை நீங்கும்.

 பிரண்டை யுடன் சாதிக்காய் சேர்த்து, அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி உடல் பலவீனம் போன்றவை நீங்கும்.