லைப் ஸ்டைல்

இறந்துபோன நாய் குட்டி..! அருகிலையே அமர்ந்து அழுதுகொண்டிருந்த தாய் நாய்..! பார்ப்போரை கண்கலங்க வைத்த சம்பவம்.!

Summary:

Dog love video goes viral

தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அணைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை பல நேரங்களில் விலங்குகள் நமக்கு உணர்த்திவிடுகிறது. இந்நிலையில் இறந்துபோன தனது குட்டி அருகே, தாய் நாய் நின்று தனது குட்டிக்காக கண்ணீர் சிந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் அண்ணா நகர் பகுதியியல் சுற்றி திரிந்த நாய் ஓன்று சமீபத்தில் 5 குட்டிகள் போட்டுள்ளது. இதில் ஒரு குட்டி நாய் மீது பைக் மோதியதில் குட்டி நாயின் கால் உடைந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளது.

தனது குட்டி அருகே இருந்து அதற்கு பால் கொடுத்து பத்திரமாக பார்த்து வந்துள்ளது தாய் நாய். இந்நிலையில் அந்த நாய் குட்டி இறந்துவிட, தனது குட்டியை விட்டு பிரியாமல் அதன் அருகிலையே அமர்ந்து அலுத்துள்ளது அந்த தாய் நாய். தனது குட்டி மீது ஈக்கள் கூட உட்கார விடாமல் துரத்தியும் உள்ளது.

இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் குட்டி நாய்யை அப்புற படுத்தியுள்ளார். அவர் குட்டியை தூக்கி செல்லும்போது அவர் பின்னாடியே இந்த நாயும் சென்றுள்ளது. நாயின் பாசத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


Advertisement