தெரியுமா? சரக்கு அடித்த பிறகு சரளமாக ஆங்கிலத்தில் பேச இதுதான் காரணமாம்!! ஆய்வு தகவல்..

தெரியுமா? சரக்கு அடித்த பிறகு சரளமாக ஆங்கிலத்தில் பேச இதுதான் காரணமாம்!! ஆய்வு தகவல்..


Does Drinking Alcohol Really Help You Speak English Better

ஆங்கில வார்த்தைகளையே உச்சரிக்க தெரியாத சிலர், மது அருந்தினால் மட்டும் ஆங்கிலத்தில் பேச தொடங்கும் நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம்.

பொதுவாகா நம்மில் பலரிடம் உள்ள பழக்கங்களில் ஒன்று கூச்சம். நமக்கு எதிர் பாலினத்தவரிடம் பேசுவது, பொது இடங்களில் பாடுவது, நடனமாடுவது, ஆங்கிலம் பேசுவது இப்படி பல விதங்களில் பலருக்கு கூச்ச சுபாவம் இருக்கும்.

ஆனால், சிறிதளவு மது அருந்திய உடனே சிலர் ஆங்கிலத்திலையே பேசி வளர்ந்ததுபோல் உடனே ஆங்கிலத்தில் பேச தொடங்கிவிடுவார்கள். நாம் கூட பல நேரங்களில் இதுபோன்று செய்திருப்போம். அதற்கு காரணம் என்ன தெரியுமா? மது அருந்தினால் மட்டும் நம்மால் எப்படி ஆங்கிலம் பேச முடிகிறது தெரியுமா?

ஜர்னல் ஆஃப் மருந்தியல் இதழில் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில், "டச்சு மொழி கற்றுக்கொண்டிருந்த 50 கும் மேற்பட்ட ஜெர்மன் மக்களை ஒன்றாக அழைத்து, சிலருக்கு தண்ணீரும், சிலருக்கு மதுபானமும் கொடுத்துள்ளனர். பின்னர் இவர்களை டச்சு மொழியில் உரையாடும்படி கூறியுள்ளனர்.

இதில், தண்ணீர் மட்டுமே குடித்த மக்களை விட, மதுபானம் அருந்திய மக்கள் சரளமாகவும், கூச்சம் இன்றியும், வார்த்தைகளை தெளிவாக உச்சரித்து பேசியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், ஒருவர் குடிபோதையில் இருக்கும்போது அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது மாற்று மொழியில் பேசுவதில் வெட்கமோ, தயக்கமோ காட்டுவது இல்லை.

மது அருந்தியிருக்கும்போது ஒரு நபர் மற்றவர்களைவிட சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியும் எனவும், மற்ற மொழிகளை எளிதாக  கற்க முடியும்" எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.