இன்னுமா இது மாறல? புத்தாண்டுக்கு தேதி பார்த்து, மறுநாள் குவிந்த நோயாளிகள்.. டாக்டர் வேதனை.!



Doctor’s Appeal Goes Viral Patients Skip Hospital on New Year Due to Superstition

உடல்நலக்குறைவால்  மருத்துவமனைக்கு செல்ல தாமதம் கூடாது என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

புத்தாண்டு தொடங்கியதும் பலரும் தங்களின் ஓராண்டுக்கான திட்டமிடலை செயல்படுத்த தொடங்கிவிட்டனர். உலகம் உருவாகி பல மில்லியன் ஆண்டுகள் ஆகியதாக கணக்கிடப்பட்டாலும், மனிதர்கள் தங்கள் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த பாரம்பரியம் காலத்தின் பகுத்தறிவுக்கேற்ப மாறுபடும் தன்மை கொண்டது. ஆனால், அதனை மாற்றாமல் தொடர்ந்து வரும் சிலர், தங்களின் செயல்களை மாற்றுவதில்லை.

 

மருத்துவர் அறிவுறுத்தல்:

அந்த வகையில், புத்தாண்டு நாளில் மருத்துவமனைக்கு சென்றால், அந்த ஆண்டு முழுவதும் மருத்துவமனை செல்ல நேரிடும் என வீட்டில் இருந்துள்ளனர். பின் மறுநாளில் மருத்துவமனைக்கு சென்று குவிந்துள்ளது தொடர்பான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பிரபல மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. மேலும், உடல்நலம் சார்ந்த விஷயத்தில் மக்கள் நாள்/கிழமை பார்க்காமல் செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
health tips

ஒரேநாளில் குவிந்தனர்:

இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில், "புத்தாண்டு அன்று மருத்துவமனைக்கு சென்றால், வருடம் முழுவதும் மருத்துவமனைக்கு போய்கிட்டே இருக்கிற மாதிரி ஆயிடும்" என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அதனால், நேற்று வராத கூட்டம் இன்று சேர்த்து வைத்து மொத்தமாக வந்து என்னை திக்கு முக்கு ஆக வைத்து விட்டனர்.

நேரம் பார்த்து விபரீதம்:

"முந்தா நாளே மாத்திரை தீர்ந்து போச்சு. நேத்து பாட்டியம்மை . அதான் வரலை. இன்னக்கி வந்திருக்கிறேன். ரெண்டு நாளா மாத்திரை போடலை " என்று கூறும் முதியவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். உடம்பிற்கு முடியவில்லை என்றால் நாள் கிழமையெல்லாம் பார்க்காதீர்கள் நண்பர்களே. அதுவும் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து உண்ணும் நபர்கள், ஒரு நாள் கூட மாத்திரைகளை தவற விடக் கூடாது.

கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுபதினங்களுக்கு நாள் , கிழமை பாருங்கள். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதில் நாள் கிழமை பார்த்து காலம் தாழ்த்த வேண்டாம் என்பது எனது பணிவான கருத்து" என வருத்தத்துடன் ஆதங்கம் தெரிவித்து அறிவுரையை பகிர்ந்துள்ளார்.

மருத்துவரின் முகநூல் பதிவு: