லைப் ஸ்டைல்

குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுப்பது எதனால் தெரியுமா.?

Summary:

குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுப்பது எதனால் தெரியுமா.?

குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்தால் உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவோ அல்லது வீட்டில் இருக்கும் மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தி விடலாம் என்ற முயற்சியில் எல்லாம் ஈடுப்படக் கூடாது. அதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே குழந்தையின் நலனில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

ஒரு சில குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட தேவையில்லை சிறிதளவு சர்க்கரை - உப்புக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும் சரியாகி விடும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கு காரணம் தவறான முறையில் பால் புகட்டுதல், அதிகப்பால் கொடுத்தல், பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல், பேதி, மூளையில் கிருமிகள் தாக்கம், மூளையில் ரத்தக்கட்டு, மூளையில் நீர் அதிகமாதல், மாட்டுப்பால் அலர்ஜி மனநிலை பாதிப்பு, சிறுநீரில் கிருமி, மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், நிமோனியா காய்ச்சல், குடல் அடைப்பு போன்ற காரணத்தால் சிறுவர்கள் வாந்தி எடுப்பதுண்டு.


Advertisement