குழந்தை பிறந்த பிறகு தொப்பை இல்லாத தட்டையான வயிறு வேண்டுமா?... இதோ உங்களுக்காக..!!

குழந்தை பிறந்த பிறகு தொப்பை இல்லாத தட்டையான வயிறு வேண்டுமா?... இதோ உங்களுக்காக..!!



Do you want a flat stomach with no belly button after giving birth?... here it is for you..!!

குழந்தை பிறந்த தாய்மார்கள் தொப்பை வயிறு இல்லாமல் முன்பு போல தட்டையான வயிறு வேண்டும் என்று விரும்பினால், வயிற்றின் தசைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கள் உடலில் இருந்து ஆக்ஸோடைசின் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்வதன் மூலமாக கர்ப்பப்பையை சுருங்கச் செய்து, தட்டையான வயிறை அடைய முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தேவைப்பட்டால் வயிற்றுப் பகுதிக்கு இறுக்கம் தரும் வகையிலான கர்ப்ப கால பெல்ட் அணிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். 

மேலும் இடுப்பு அடிவயிறு மற்றும் பின் முதுகு போன்ற பகுதிகளை பலப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள் செய்யலாம். மற்றவர்களைப் போல மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. குறிப்பாக பிரசவத்தில் இருந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் வரையில் மிதமான அளவிலான உடற்பயிற்சிகளை மட்டும் செய்யலாம். 
முதலில் உடல் பாகங்களுக்கு ரிலாக்ஸ் அளிக்கும் சாதாரண பயிற்சிகளை செய்தாலே போதுமானது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல் பருமனை குறைக்கவும் உடற்பயிற்சி செய்ய விரும்பும் புதிய தாய்மார்கள் தங்களுடைய மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இதனை தொடங்குவது மிகுந்த நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.