மனித விந்துசெல் எப்படி உருவாகிறது தெரியுமா?.. தெரிச்சிக்கலாம் வாங்க..!!

மனித விந்துசெல் எப்படி உருவாகிறது தெரியுமா?.. தெரிச்சிக்கலாம் வாங்க..!!



do-you-know-how-human-sperm-is-formed

மனிதனின் விந்து செல் எப்படி உருவாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

விந்து செல் உருவாக்கம் :

ஒரு ஆணின் விந்தகத்தில் விந்து செல் உருவாகும் நிகழ்ச்சியே விந்து செல் உருவாக்கம். இந்த விந்து செல் உருவாக்கத்தின் நிலைகள் குறித்து காணலாம்.

பெருக்கநிலை :

விந்தகத்தின் விந்து நுண்குழலில் மறைமுக செல்பிரிதல் மூலமாக விந்து தாய் செல்கள், ஏராளமான முதல் நிலை விந்து செல்களை உருவாக்குகிறது. முதல் நிலை விந்து செல்களானது (23 இணை) 46 குரோமோசோம்களை கொண்ட இரட்டை மைய செல்கள்.

வளர்ச்சி நிலை :

முதல் நிலை விந்து செல்களானது சிறிது நாட்களுக்கு பின்னர் சற்று வளர்ச்சியடைகிறது. இந்த நிலைக்கு வளர்ச்சி நிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

Sperm

File Picture 

முதிர்ச்சி நிலை :

முதிர்ச்சி நிலை என்பது முதல்நிலை விந்து செல்கள், குன்றல் I பகுப்பின் மூலமாக இரண்டாம் நிலை விந்து செல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டாம் நிலை விந்து செல்கள் 23 ஒருமையம் குரோமோசங்களை பெற்றுள்ளது.

இது குன்றல் பகுப்பு II மூலமாக 2 ஸ்பெர்மாட்டிடுகளை உருவாக்குகிறது. பின் ஸ்பெர்மாட்டிடுகள் செயலாற்றும் விந்து செல்லாக மாற்றமடைகிறது.

மனிதனின் விந்து செல் இப்படி மாறுவதற்க "ஸ்பெர்மியோஜெனிசிஸ்" என்று பெயர். இந்த விந்து செல் உருவாகத்தில் ஒரு விந்து தாய் செல், நான்கு விந்து செல்களை உருவாக்குகிறது. இதுவே முதிர்ந்த விந்து செல்லாகும்.

இப்படிதான் விந்து செல் உருவாக்கம் நடைபெறுகிறது. விந்து செல் உருவாக்கமானது முதல்நிலை, இரண்டாம் நிலை, முதிர்ச்சி நிலை என்று மூன்றாக பிரிக்கப்பட்டு நிகழ்கிறது.