காரமாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு பிரச்சனைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

காரமாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு பிரச்சனைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!


disadvantages-of-spicy-foods

பொதுவாக மனிதர்கள் அனைவரும் காலசாரமான உணவுகளை சாப்பிடவே விரும்புகின்றனர். அதிலும் சில பகுதிகளில் காரமான உணவுகளுக்கு தனி உணவகங்களே உள்ளது. ஆனால் இப்படி காரமான உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான தீங்குகள் ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எனவே காரமான உணவு சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். காரமாக சாப்பிட்டால் வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

Spicy foods

அதிலும் குறிப்பாக அதிக காரம் சாப்பிடுவதால் வயிற்று புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றையும் ஏற்படுத்தும். அதேபோல் வாயில் புண்கள் மற்றும் நாக்கு எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக அதிக ஆரம் சாப்பிடுவது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கடும் தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். அதன்படி மூக்கில் எரிச்சல், தும்மல் மற்றும் மூக்கடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

Spicy foods

அதேபோல் அதிக காரம் சாப்பிடுவது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தலைவலி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மேலும் அதிக காரம் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் எனவே காரத்தை அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது.