ஜங்க் ஃபுட்ஸால் இவ்வளவு ஆபத்தா?.. செரிமானத்தை மேம்படுத்த சிறப்பான வழிகள் இதோ..! மிஸ் பண்ணிடாதீங்க..!!digestion-tips-tamil

செரிமானத்தை மேம்படுத்த சில வழிகள் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

தற்போதைய காலகட்டத்தில் ஜங்க் ஃபுட்ஸ்களை சாப்பிடுவதையே இளைய சமுதாயத்தினர் விரும்புகின்றனர். மேலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை தவிர்க்கின்றனர். "உணவே மருந்து" என்று அக்காலத்திலே கூறப்பட்ட போதிலும், உணவை விட உழைப்பில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

இதனால் சரியான நேரத்தில் உண்பது மட்டுமல்லாமல், சரியான உணவையும் உண்ணாமல் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை உண்டு வருகின்றனர். இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி காணலாம்.

செரிமானத்தை மேம்படுத்த நார்ச்சத்து மிகுந்த உணவுகளையும், கீரைகளையும், காய்கறிகளையும் தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்துவடன் உடல் சார்ந்த பல பிரச்சனைகளையும் தீர்க்கிறது. மேலும் தினமும் ஒரு காய்கறியை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். 

digestion

பழங்கள் அதிகமாக உண்டு வருவதால் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. ஒரு நாளைக்கு ஒரு கனி என்று அன்றாடம் எடுத்துக் கொள்வதால் அனைத்து வகையான பழங்களின் பலன்களையும் பெற முடியும்.

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் வெறும் வயிற்றில் அரை லிட்டர் தண்ணீராவது பருகுவது காலை கடன் நன்றாக கழிக்க உதவும். செரிமான கோளாறுகள் என்பது உடலில் தேவையில்லாத உணவுகள் சென்று தங்குவதால் ஏற்படுகிறது. 

இதனால் செரிமான கோளாறுகள் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் போன்றவையும் ஏற்படும். இதனை சரி செய்வது மிகவும் முக்கியமானது. தினசரி 3 கிலோமீட்டர் அல்லது 10000 காலடிகள் நடக்க வேண்டும். இது செரிமானத்தை இயல்பாக்கி உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவும். மேலும் ஜாக்கிங், நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் மற்றும் ஓட்டம் போன்ற கார்டியோ பயிற்சிகளில் தினம் ஒன்றை செய்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.