லைப் ஸ்டைல்

அடேங்கப்பா.. என்னா நடிப்புடா சாமி.. இறந்தது போல் நடித்து உயிர் தப்பிய மான்.. வைரல் வீடியோ காட்சி..

Summary:

மான் ஒன்று இருந்ததுபோல் நடித்து சிறுத்தை, கழுதைப் புலியிடம் இருந்து தப்பிக்கும் வீடியோ இணை

மான் ஒன்று இருந்ததுபோல் நடித்து சிறுத்தை, கழுதைப் புலியிடம் இருந்து தப்பிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Nature is Metal என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு ஒன்றில், மான் ஒன்று சிறுத்தை மற்றும் கழுதைப்புலியிடம் இருந்து தப்பிக்கிறது. சுமார் 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியில், மான் ஒன்று வழக்கம்போல் இரைதேடி கொண்டிருக்கும்போது தன்னை தாக்குவதற்காக சிறுத்தை மற்றும் கழுதைப்புலி வருவதை பார்க்கிறது.

உடனே அவரிடம் இருந்து உயிர் தப்பிக்க, மான் இருந்ததுபோல் நடிக்க தொடங்குகிறது. தரையில் கிடைக்கும் மானை கழுதைப்புலி புரட்டி புரட்டி பார்த்தும், மான் கட்டைபோல் கிடக்கிறது. இதனிடையே சிறுத்தையை விரட்டுவதற்காக கழுதைப்புலி அங்கிருந்தது நகர, அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மான் அங்கிருந்து தப்பிச்செல்கிறது.

மானின் இந்த நடிப்பிற்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement