குழந்தைகளின் நெஞ்சு சளி,இருமல் ஒரே இரவில் குறைய வேண்டுமா... இதை மட்டும் செய்து பாருங்கள்...Cough and cold relief medicine for children

குழந்தைகள் நெஞ்சு சளி மற்றும் இருமல் தொல்லையால் இரவில் தூங்காமல் அவதிபடுகிறார்களா அப்படியான குழந்தைகளுக்கு இந்த ஒரே ஒரு மருந்தை மட்டும் உபயோகித்து பாருங்கள் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை,பச்சைக் கற்பூரம் தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்.

முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் தடவிக் கொள்ள வேண்டும்.இந்த எண்ணெய் தடவிய வெற்றிலையை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் கை பொறுக்கும் அளவிற்கு சூடு வரும் வரை வாட்டி எடுக்கவும்.

Cough and cold

அதாவது குழந்தைகள் சூடு பொறுக்கும் வரை மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறு சூடு செய்த வெற்றிலையை இரவில் மட்டும் மூன்று நாட்கள் குழந்தையின் நெஞ்சில் வைத்து வந்தால் இருமல் மற்றும் சளி உடனடியாக கரைந்து வெளியேறிவிடும்.

இதனை மூன்று மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பின்பற்றலாம்.இதனை பயன்படுத்திய ஒரே இரவிலேயே சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வளியே வருவதை காணலாம்.மேலும் குழந்தைகளின் இரும்பல் பிரச்சனைக்கும் இது நல்ல மருந்தாக இருக்கும்.