"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா? டயட்டீஷியன் என்ன சொல்கிறார்.?
தேங்காய் எண்ணெயின் பயன்பாடு குறித்து கோவையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம், தேங்காய் எண்ணெய் என்பது கொப்பரைத் தேங்காயில் இருந்து மற்றும் புதிதான தேங்காயில் இருந்து எடுக்கப்படுகிறது.
இதில் இருக்கும் சாச்சுரேட்டட் கொழுப்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதனை சருமத்துக்கு மேல்பூச்சாக பயன்படுத்தலாம். நீங்களே ஆட்டி எடுக்கும் தேங்காய் எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
ஆனால் தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்து சமைப்பது, பொரிக்கவோ பயன்படுத்தக் கூடாது. இதனால் கொழுப்பு அளவு அதிகரிக்காது. அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம்.
வாய் சுகாதாரத்தை மேம்படுத்த ஆயில் புல்லிங் செய்ய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதால் சருமமும், கூந்தலும் மென்மையாக இருக்கும். இதில் ஆரோக்கியமான கொழுப்பு தான் உள்ளது. அது உடலுக்கு நல்லது என்று டயட்டிஷியன் கற்பகம் கூறியுள்ளார்.