மீன் சாப்பிட்ட உடனே இந்த உணவுகளைத் எல்லாம் சாப்பிடாத்தீங்க.....! நிபுணர்களின் விளக்கம்...



can-we-eat-ice-cream-after-fish

உணவுப் பழக்கங்களில் விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மீன் சாப்பிட்ட பிறகு உடனடியாக இனிப்பு அல்லது பால் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இதுகுறித்து நிபுணர்கள் பகிர்ந்த விளக்கங்கள் தற்போது கவனத்தை ஈர்க்கின்றன.

மீன்-பால் சேர்க்கை குறித்து பொதுவான நம்பிக்கை

அசைவ உணவகங்களில் மீன் உண்டவுடன் பலர் டெசெர்டாக ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவது சாதாரணம். ஆனால் மீன் மற்றும் பால் பொருட்களை சேர்த்து உட்கொள்வது தோல், வயிறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என பொதுவாக கூறப்படுகிறது.

நிபுணர்கள் சொல்லும் நிலைப்பாடு

சில மருத்துவ நிபுணர்கள் மீன் சாப்பிட்ட பிறகு Ice Cream சாப்பிடுவதில் பெரும்பிரச்சினை இல்லை எனக் கூறுகின்றனர். இருப்பினும் செரிமானக் கோளாறு அல்லது ஒவ்வாமை வாய்ந்தவர்கள் இதில் அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள்! மருத்துவர்கள் எச்சரிக்கை..

இடைவெளி வைப்பது ஏன் அவசியம்?

மீன் சாப்பிட்ட உடனடியாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கக்கூடும். குறைந்தது 1 முதல் 1.5 மணி நேர இடைவெளி விட்டு சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மீனுடன் சேர்த்து தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் மற்றும் தயிர் போன்ற பால் சார்ந்த உணவுகள், எலுமிச்சை-ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், டீ-காபி போலிய பானங்கள், அதிக மாவுச்சத்து உள்ள உணவுகள் ஆகியவை மீனுடன் சேர்ந்து உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால், மீன் உணவுகளுக்குப் பிறகு வழக்கத்தைப் போல இனிப்புகள் சாப்பிடலாம் என்றாலும், உடல் எதிர்வினை, உடனான ஒவ்வாமை, செரிமானநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பான முறையில் முடிவு எடுப்பது நலமென நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பதால் ஆபத்தா? பொதுவான பழக்கம் பெரிய பிரச்சனை ஆகுமா! அவசியம் தெரிஞ்சிக்கோங்க...