உலகம் லைப் ஸ்டைல்

26 ஆண்டுகள் பெண் உருவத்தில் வாழ்ந்த ஆண்! திருமணத்திற்கு பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்

Summary:

boy lived as girl for 26 years

சீனாவில் 26 ஆண்டுகள் தான் ஒரு ஆண் என்பதையே உணராமல் பெண் உருவத்தில் வாழ்ந்து வந்த பெண், திருமணத்திற்கு பின் மருத்துவப் பரிசோதனையில் தான் ஒரு ஆண் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சீனாவின் ஹுனான் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணிற்கு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் அந்த பெண் கருவுறாமல் இருந்துள்ளார். இதனால் மருத்துவ பரிசோதனைக்காக கணவனும் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

marriage க்கான பட முடிவு

அந்தப் பெண்ணை முழுவதும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், மருத்துவ பரிசோதனையில் அவர் ஒரு பெண்ணே இல்லை என்பது தெரியவந்துள்ளது. 26 ஆண்டுகளாக, தான் பெண் உருவில் வாழ்த்து வரும் ஒரு ஆண் என்ற செய்தியை கேட்ட அந்தப் பெண் மிகவும் கவலையடைந்தார்.

வெளிப்புறத் தோற்றத்தில் ஒரு பெண்ணுக்கான உருவத்தை பெற்றுள்ளவர் உடல்ரீதியாக ஒரு ஆணுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலும் தோற்றமும் உலகை மட்டும் அல்லாமல் அவரையும் இத்தனை நாட்கள் தன்னை ஒரு பெண் என நம்பவைத்தது.

ஒரு பெண்ணாக அவர் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், அவருடைய உடலில் மறைந்திருக்கும் விரைகளின் வளர்ச்சி, முழுமையடையாத பாலுறுப்புச் சுரப்பி வளர்ச்சி போன்றவை அவர் ஒரு ஆண் என உறுதிபடுத்தியுள்ளது. Sexual Deformity எனப்படும் பாலியல் குறைபாடு காரணமாக தான் இவர் இத்தனை நாட்களாக பெண் உருவில் வாழ்த்து வருகிறார் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement