பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடல் வலுப்பெற கருப்பு உளுந்து புட்டு.. எப்படி செய்யணும் தெரியுமா.?

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடல் வலுப்பெற கருப்பு உளுந்து புட்டு.. எப்படி செய்யணும் தெரியுமா.?


Black gram recipe

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு நோய்த்தாக்கத்தினால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. மேலும் தவறான உணவு பழக்கத்தினாலும் அடிக்கடி நோய்வாய் பட்டு வருகின்றனர்.

Lifestyle

இது போன்ற நிலையில், கருப்பு உளுந்தை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் அனைவருக்கும் பல்வேறு விதமான சத்துக்கள் கிடைக்கின்றது. மேலும் கருப்பு உளுந்தில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் பெரியவர்களுக்கு வயதான காலத்தில் மூட்டு மற்றும் கை கால் வலிகள் ஏற்படுவதையும் கருப்பு உளுந்து தடுக்கிறது. கருப்பு உளுந்தை புட்டாக செய்து சாப்பிடலாம் இதனை எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு வானொலியில் அரிசி மற்றும் கருப்பு உளுந்தை சம அளவு எடுத்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து ஆற வைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் இரண்டையும் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

Lifestyle

பின்பு மாவை சலித்து புட்டு மாவு போல் தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் மாவு கால் மூடி தேங்காய் போட்டு வேக வைத்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றி நாட்டு சக்கரை, நெய், ஏலக்காய் போன்றவற்றை சேர்த்தால் சுவையான கருப்பு உளுந்து புட்டு தயார்.