பொடுகு தொல்லையா.. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பொடுகு தொல்லையை எப்படி சரி செய்யலாம்.?



Best remedy dor dandruff

நம் அழகை வெளிப்படுத்துவதில் முகத்தைப் போலவே தலைமுடிக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் தலைமுடியை அழகாகப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட சில இயற்கை முறைகளை இங்கு பார்ப்போம்.

Lifestyle

ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து நன்கு கலக்கி, முடியின்  வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். தலைமுடியும் மென்மையாக மாறும்.

அதே போல் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை சுத்தம் செய்து நன்கு அரைத்து, அதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து ஒரு மணிநேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு மற்றும் அரிப்புத் தொல்லைகள் நீங்கும்.

Lifestyle

அதேபோல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முடியின் வேர்க்காலில் படும்படி அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசி சுத்தம் செய்யலாம். இப்படி செய்தாலும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.