பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா.?

பழைய சோறு சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா.?


Benefits of farmented rice

அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் காலையில் நீராகாரம் எனப்படும் பழைய சோறை சாப்பிட்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள். முதல் நாள் வடித்த சோற்றில் இரவு நீர் ஊற்றி நொதிக்க விட்டு அடுத்த நாள் காலை அதை கரைத்து குடிப்பார்கள்.

rice

இத்தகைய பழைய சோற்றில் பல நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. காலையில் பழைய சோறு சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் தீரும். மேலும் இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது. மேலும் பழைய சோறு சாப்பிடுவது தோல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் பழைய சோறு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மேலும் பழைய சோற்றை நீர் ஊற்றி கரைத்து தினமும் காலையில் குடித்து வந்தால், அது வயிற்றில் உள்ள நச்சுக் கிருமிகளை அழித்து வெளியேற்றுகிறது.

rice

மேலும் இந்தப் பழைய சோற்றை தினமும் காலையில் உட்கொள்வதால், நம் உடலுக்கு இளமையான தோற்றம் கிடைக்கும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்த்து வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.