கர்ப்பப்பையை பலப்படுத்தும் சர்க்கரை வள்ளி கிழங்கு.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?

கர்ப்பப்பையை பலப்படுத்தும் சர்க்கரை வள்ளி கிழங்கு.! வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா.!?


Benefits of eating sweet potato

பொதுவாக கிழங்கு வகைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கிழங்கு வகைகளில் கிடைக்கிறது. இதில் குறிப்பாக சர்க்கரை வள்ளி கிழங்கில் நம் உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது? என்னென்ன நன்மைகள் உள்ளன? என்பதை விளக்கமாக பார்க்கலாம்?

Sweet potato

1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

2. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை வள்ளிகிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பையை பலப்படுத்தி கர்ப்பப்பை சார்ந்த நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

4. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு அருமருந்தாக உள்ளது.
5. குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை சர்க்கரை வள்ளி கிழங்கு தீர்க்கிறது.
6. உடலில் உருவாகும் புற்று நோய் செல்களை அழித்து புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
7. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

​​​​​
Sweet potato

8. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சர்க்கரை வள்ளிகிழங்கை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உணவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.