"தினமும் ஒரே ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?!"

"தினமும் ஒரே ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?!"



Benefits of eating garlic

அனைவரும் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள் தான் பூண்டு. இது ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு பார்ப்போம். தினமும் பூண்டு சாப்பிட்டால் ஜலதோஷம் மற்றும் வாய்வுப் பிரச்சனைகள் தீரும்.

Garlic

வைரஸ் மற்றும் பாக்டீரியாவினால் வரும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் நம்மை அண்டாது. இதை உணவில் சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

மேலும் இது இன்சுலின் சுரப்பதை அதிகரித்து சர்க்கரை அளவை சீராக்குகிறது. தொண்டை கரகரப்பை போக்கும். பூண்டில் உள்ள அலிசின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கியது. பூண்டை கடித்து அதன் சாறு பல்லில் பட்டாலே பல்வலி பறந்து போய்விடும். 

Garlic

மேலும் நுரையீரலில் படிந்துள்ள கெட்டியான சளியை வெளியேற்றிவிடும். குடலில் உள்ள புழுக்கள் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும். மேலும் ரத்தக்குழாய்களில் படிந்துள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும்.