ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ... இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..!

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ... இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..!



beetroot-increases-the-level-of-hemoglobin-in-the-blood

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

காய்கறி கடைகளில் மலிவாக கிடைக்கும் பீட்ரூட்டில் பொட்டாசியம் சத்துக்கள் அதிக அளவு அடங்கியுள்ளதால் நமக்கு பொட்டாசியம் குறைபாட்டால் உண்டாகும் உடல் சோர்வு, பலவீனம் மற்றும் இதய கோளாறுகள் போன்றவற்றை பீட்ரூட் குணப்படுத்தும். 

பீட்ரூட் ஆரம்ப நிலை கேன்சரை குணப்படுத்தும் என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. எனவே பீட்ரூட்டை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .

அல்சர் நோயால் அவதி படுவோர் பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட் சாறு எடுத்து குடித்து வர அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை சரி செய்யும். தீப்புண் ஏற்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் விரைவில் புண் ஆறும்.

ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் குறைவாக இருந்தால், பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கும்.