"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஆரோக்கியமான இனிப்பு.! சுவையான பீட்ரூட் அல்வா... உடனே டிரை பண்ணி பாருங்க.!
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பீட்ரூட் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். உடலில் ஹீமோகுளோபினை அதிகரித்து உடலை ஆரோக்கியப்படுத்தும். கல்லீரலை சுத்தப்படுத்தி பாதுகாக்கும். மேலும், இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும். பீட்ரூட் செரிமானக் கோளாறுகளை சரி செய்யும். இரத்த அழுத்தத்தை நீக்கி, இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும். பீட்ரூட்டை அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுநீரக கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. ஆகையால், அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. இப்போது சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
பீட்ரூட் - 1 கப் (துருவியது)
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
பால் - 1 கப்
பிளைன் கோவா - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
முலாம்பழ விதை - தேவையான அளவு
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்க வேண்டும். பின்பு அதில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி 10 மற்றும் திராட்சை 10 சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் 1 கப் பீட்ரூட் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் அளவுக்கு வதக்கவும். நீர் வற்றியதும் அதில் 1 கப் பால் சேர்த்து கலக்கவும். பாலும், பீட்ரூட்டும் சேர்ந்து பால் இழுத்ததும் சர்க்கரை 1/2 கப் சேர்த்து கலந்து விடவும்.
இப்போது இதில் 1 சிட்டிக்காய் உப்பு, ஏலக்காய்ப் பொடி மற்றும் பிளைன் கோவா (இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்) 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி விட வேண்டும். அதோடு, முலாம்பழ விதை தூவி பரிமாரலாம். இப்போது, மிகவும் சுவையான பீட்ரூட் அல்வா தயார்.
குறிப்பு :
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று சாப்பிடுவது நல்லது.