சம்மர் வெயிலுக்கு செம கூலான தர்பூசணி குல்ஃபி.!! வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.!!

சம்மர் வெயிலுக்கு செம கூலான தர்பூசணி குல்ஃபி.!! வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.!!


beat-the-summer-heat-with-this-home-made-water-melon-ku

கோடை வெயிலுக்கு சூப்பரான தர்பூசணி பழம் குல்பி ஐஸ் எப்படி செய்யாலாம் என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்: 1/2 தர்பூசணி, 1/2 லி.பால், 1/2 கப் சர்க்கரை, 1 தர்பூசணி, 1/2 ஸ்பூன் சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி, 2 டீஸ்பூன் ஏலக்காய் தூள், 3 ஐஸ்கிரீம் குச்சி

Healthy Foodசெய்முறை: முதலில் ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி பாதியளவு குறையும் வரை தண்ணீர் விடாமல் நன்கு காய்ச்சவும். பின் ஒரு பவுளில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி கைவிடாமல் நன்கு கலந்து விடவும். பால் சிறிது கெட்டியானதும், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.  தர்பூசணியை நன்கு கழுவி தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

Healthy Foodபின் தர்பூசணியுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளுக்கு மாற்றவும். அதன்பிறகு அதன் மேல் நறுக்கிய முந்திரி, பாதாம் போட்டு நன்கு கலந்து டம்ளர்களில் ஊற்றி நடுவில் 3 ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து பிரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான மற்றும் வித்தியாசமான தர்பூசணி குல்பி ரெடி.