குதிரைவாலியில் பூரண கொழுக்கட்டை.. அசத்தல் சுவையில் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.! உடனே ட்ரை பண்ணுங்க.!



barnyard-millet-flakes-wholemeal-pudding

குதிரைவாலி மாவை பயன்படுத்தி பூரண கொழுக்கட்டை செய்தால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சுவை மிகுந்த பூரண கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

வெல்லம் - 1/4 கிலோ

( பொடித்தது )

குதிரைவாலி மாவு - 1/2 கிலோ 

ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி 

உப்பு - 1/4 தேக்கரண்டி 

தண்ணீர் - 1/4 லிட்டர் 

தேங்காய் - 2 கப் ( துருவியது )

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் 2 கப், வெல்லம் பொடித்தது 1/4 கிலோ மற்றும் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியான பதம் வரும் வரை கிளறவும். பின்பு, இவை கெட்டியான பதம் வந்ததும் இறக்கி வைத்து ஆற விடவும். இப்போது, பூரணம் தயார்.

இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான ரோஸ் மில்க்..! கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்..!!

Barnyard millet

இப்போது, வேறொரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் தண்ணீர் மற்றும் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்பு, இந்த கொதிக்கும் தண்ணீரில் 1/2 கிலோ குதிரைவாலி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.

பின்பு, கெட்டி பதம் வந்தவுடன் குதிரைவாலி மாவை சிறு உருண்டையாக பிடித்து அதில் பூரணம் வைத்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் சுவையான குதிரைவாலி பூரண கொழுக்கட்டை தயார்.

இதையும் படிங்க: முகத்தில் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறதா.? கல்லீரல் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.!?