கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான ரோஸ் மில்க்..! கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்..!!



rose-milk-is-a-refreshing-drink-for-the-summer-heat-you

இந்த கோடை வெயில் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளிர்பானங்களை விரும்புவது உண்டு. இவ்வாறு, கடைகளில் குளிர்பானங்கள் குடிப்பது நல்லதல்ல. ஆகையால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ரோஸ் மில்க் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

ரோஸ் மில்க் செய்ய தேவையானப் பொருட்கள் :

பால் - 1/2 லிட்டர் 

சர்க்கரை - 100 கிராம் 

பாதம் - 10

சப்ஜா விதைகள் - 5 கிராம் ( ஊற வைத்தது )

ரோஸ் எசன்ஸ் - 5 துளிகள் 

பன்னீர் - 4 துளிகள் 

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைக்கவும். பிறகு, அதில் 1/2 லிட்டர் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குளிர வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: முகத்தில் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறதா.? கல்லீரல் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.!?

Summer Seasonபிறகு, குளிர வைத்த பாலில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் படி சர்க்கரை, தோல் நீக்கி நீல வாக்கில் நறுக்கிய பாதம், ஊற வைத்த சப்ஜா விதைகள், ரோஸ் எசன்ஸ், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்போது, இந்த பானத்தை குளிர்சாதனைப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து விட வேண்டும். பிறகு, குளிர்சாதனைப் பெட்டியில் இருந்து இந்த பானத்தை எடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு குடிக்கலாம். இந்த பானம் மிகவும் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இதையும் படிங்க: இட்லி சாப்பிட்டால் கூட கேன்சர் வருதா.? என்ன கொடுமை சரவணன் இது.?!