உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி டெங்கு காய்ச்சல் வரவே வராது! விஞானிகள் கண்டுபிடித்த புது வழி..!

Summary:

Australian scientist invented new way to stop dengue

டெங்கு கொசுவால் பாதிக்கப்பட்டு கடந்தவருடம் பலபேர் உயிரிழந்தனர். இந்நிலையில் டெங்கு கொசுவை மலடாக்கி அதன் மூலம் உருவாகும் டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்தும் புதிய முறையை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுப் பிடித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அறிவியல் இயக்கத்தின் ஆய்வாளர்கள் கடிக்கும் தன்மை இல்லாத ஆண் ஏடிஎஸ் கொசுக்களை ஆய்வு கூடத்தில் வைத்து ஆய்வு செய்து செய்தனர். அப்போது, வால்பாஷியா என்ற கிருமியியை கொண்டு அந்த கொசுக்களை அவர்கள் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்ட  ஆண் கொசுக்களை வெளியில் பறக்கவிட்டு சோதித்துள்ளனர் . இந்த ஆண் கொசுக்கள் அடுத்த மூன்று மாத காலமாக பெண் கொசுவுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அந்த முட்டையிலிருந்து  குஞ்சுகள் எதுவும் வெளிவரவில்லை. அதாவது அந்த கொசுக்களின் இனப் பெருக்கம் முற்றிலும் இதனால் தடைப்பட்டு உள்ளது

இந்த இச்சையின் மூலம் டெங்கு கொசுக்களின் உற்பத்தியை குறைத்து முற்றிலும் டெங்கு கொசுக்கள் உருவாகுவதை தடுக்கமுடியும் என்று விஞானிகள் கருத்து தெரிவித்துள்னர்.

மேலும் இதன் மூலம் அங்கு டெங்கு காய்ச்சல் வருவது வெகுவாக தடுக்கப்பட்டு உள்ளது. இது தங்களது ஆய்விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஆராய்சியாளர்கள தெரிவித்து உள்ளனர்

இந்த முறை மூலம், டெங்கு காய்ச்சல் பரவுவதை 80%  வரை குறைக்க  முடியும் என என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


Advertisement