13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
ஆந்திரா ஸ்டைலில் அசத்தல் புளியோதரை; செய்வது எப்படி?..!
சிறுபிள்ளையாக இருந்தது முதல் தற்போது வரை, நமது வாழ்நாட்களில் நாம் பலவிதமான புளியோதரைகளை சாப்பிட்டு இருப்போம். இவற்றை வீட்டில் செய்தால் சுவையுடன் இருக்கும். கோவில் ஸ்டைலில் சாப்பிட புளியோதரை வேண்டும் என பலமுறை நாம் நினைத்திருப்போம். இன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 3 கப்,
புளி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
நல்லெண்ணெய் - 3 கரண்டி,
கடுகு, உளுந்து - 2 கரண்டி,
கடலைப்பருப்பு - 4 கரண்டி,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயம் - சிறிதளவு,
எள்ளு - 1 கரண்டி,
மல்லாட்டை - 3 கரண்டி,
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கரைசலில் பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: இட்லி-தோசைக்கு அருமையான, சத்தான முருங்கைக் கீரை பொடி செய்வது எப்படி?..!
பின் வானெலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், மல்லாட்டை, எள்ளு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.
இதனுடன் கரைத்து வாய்த்த புளிக்கரைசலை சேர்த்து உப்பு இட்டு, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பின் சாதத்தில் புளிக்கரைசலை சேர்ந்து கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.
பதிவு நன்றிதிண்டுக்கல் சமையல்
இதையும் படிங்க: COOKING TIPS : உணவின் சுவையை அதிகரிக்க இந்த 10 குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.!?