
Amazing donkey explain quality of leader video goes viral
சில நேரங்களில் மனிதர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது விலங்குகள். அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இந்த வீடியோ காட்சி.
கம்புகளால் அடைக்கப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கழுதைகள் வெளியே வர முயல்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கழுதை அப்படியே நின்றுவிட, மற்றொரு கழுதை தன்னால் முடிந்தவரை முயல்கிறது.
கம்புகளுக்கு இடையே தலையே உள்ளே விட்டு வெளியே வர முயல்கிறது, தாவி குதித்து வெளிய வர முயல்கிறது. அணைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், மூன்றாவதாக மற்றொரு கழுதை அங்கு வருகிறது. தனது வாயால் கீழே உள்ள கம்பை எடுத்து வெளியே செல்வதற்கான பாதையை உருவாக்குகிறது.
அதுமட்டும் இல்லாமல், தான் ஏற்படுத்திய அந்த பாதையில், மற்ற இரண்டு கழுதைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, காத்திருந்து பின்னர் தானும் வெளியே செல்கிறது. Leader (தலைவன்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பதிவு தலைமை பண்பினை எடுத்துரைக்கும் ஒரு அற்புதமான பதிவு என்றே கூறலாம்.
Leader 🙂 pic.twitter.com/yPicbsqWF4
— Nature is Lit🔥 (@NaturelsLit) March 13, 2020
Advertisement
Advertisement