லைப் ஸ்டைல் சமூகம் General

"என்னை ஜாமினில் எடுங்கள்" உறவினர்களிடம் கதறும் குன்றத்தூர் அபிராமி சிறையில் என்ன செய்கிறார் பாருங்கள்!!

Summary:

abirami asks to take her out in bail

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.

sundar
 
இதனையடுத்து போலீஸார் அபிராமி, அவளது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 

"காமம் என் கண்ணை மறைத்து விட்டது, அநியாயமாக குழந்தைகளை கொன்றுவிட்டேனே" என நினைத்து சில நாட்கள் அழுது கொண்டே இருந்துள்ளார் அபிராமி. இது ஒருபுறம் இருக்க சக கைதிகளும் அவரை சூழ்ந்து கொண்டு, என்ன ஆனது? என்று கதை கேட்டுள்ளனர். ஆனால் அபிராமி அவர்களிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லையாம். 
 
இதனால் அபிராமி பல நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது இதனை விட்டு வெளியில் வர அபிராமி, தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர் தன்னை ஜாமீனில் எடுக்குமாறு தங்கள் உறவினர்களிடம் கதறுவதாகவும் தெரிகிறது.


Advertisement