லைப் ஸ்டைல் சமூகம்

தன் மகளுடன் பேசுவதை கண்டித்த அத்தை; 15 வயது சிறுவனால் அத்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்

Summary:

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44) வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (35), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி மதியம் தமிழ்செல்வி வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவின் படி விசாரணை நடத்தி தமிழ்செல்வியின் உறவுக்கார 15 சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அத்தை தமிழ்ச்செல்வியை துடிக்க துடிக்க கொலை செய்தது எப்படி? என்பது பற்றி மாணவன் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்: 

எனது மாமா குடும்பத்தினர் வசித்து வந்த அதே தெருவில்தான் எங்கள் வீடும் உள்ளது. சிறு வயதில் இருந்தே நானும், எனது தம்பியும் மாமா வீட்டுக்கு சென்று விளையாடுவோம். அப்போது மாமா மகளுடன் நான் பழகினேன். அவள் பெரிய வளானதும் பழகக் கூடாது என்று அத்தை தமிழ்ச்செல்வி கண்டித்தார். 

கடந்த 27-ந்தேதி தம்பிக்கு பிறந்த நாள். கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும் என்று மாமன் மகளை அழைத்திருந்தேன். அவள் வரவில்லை. 

இதுபற்றி நான் அவளிடம் கேட்டதை அத்தை பார்த்து விட்டார். என்னை தனியாக அழைத்து கண்டித்ததுடன் கையால் அடித்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

எப்படியாவது அத்தையை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டேன். இதற்காக வீட்டுக்கு சென்றேன். தூங்கிக் கொண்டிருந்த அத்தையின் கழுத்தை நெரித்தேன் அவர் திமிறினார். 

இதனால் அருகில் இருந்த ‘டெடிபேர்’ பொம்மையால் முகத்தை அழுத்தினேன். மூச்சுத்திணறி மயங்கினார். உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதால் கைமணிக்கட்டை துண்டித்தேன். தமது உடம்பில் எதெல்லாம் உயிர்நாடி என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனை வைத்தே அப்படி செய்தேன்.'

இவ்வாறு மாணவன் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிரவைத்துள்ளது.


Advertisement