மாமியாருடன் கள்ளத்தொடர்பு... நண்பனை கொல்ல ஸ்கெட்ச்... வசமாக சிக்கிய இளைஞர்.!

மாமியாருடன் கள்ளத்தொடர்பு... நண்பனை கொல்ல ஸ்கெட்ச்... வசமாக சிக்கிய இளைஞர்.!


youth-arrested-for-attempt-to-murder-his-friend-for-bei

பாண்டிச்சேரி அருகே நண்பரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவரது மாமியார் சசிகலா. 40 வயதான சசிகலா இரவு ஹோட்டல் நடத்தி வருகிறார். சசிகலாவிற்கும் கௌதமின் நண்பரான கோபி என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

Indiaஇது தொடர்பாக கௌதம் தனது நண்பர் கோபியை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கௌதம் அவரை கொலை செய்யும் முயற்சியில் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் கோபி பலத்த காயம் அடைந்து இருக்கிறார்.

Indiaஇந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கோபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் மீது தாக்குதல் நடத்திய கௌதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.