அவ என் காதலி! திருமணத்தில் வாலிபன் செய்த காரியம்! அதிர்ச்சியில் உறைந்த மணமகன்! வைரலாகும் ஷாக் வீடியோ!!

அவ என் காதலி! திருமணத்தில் வாலிபன் செய்த காரியம்! அதிர்ச்சியில் உறைந்த மணமகன்! வைரலாகும் ஷாக் வீடியோ!!


Youngman misbehaviour in girl friend wedding

உத்தரபிரதேசத்தில் காதலியின் திருமணத்தில் புகுந்த காதலன், மணமகள் தனக்குத்தான் சொந்தம் என  அவரது முகத்தில் குங்குமத்தை பூசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞன் வெளியூரில் இருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்து அந்த இளைஞர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக் கொள்ளும் சடங்குகள் நடைபெற்றுள்ளது. இதன் இடையே புகுந்த அந்த வாலிபர் மணப்பெண்ணின் முகத்தில் குங்குமத்தை பூசி ரகளையில்  ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கியுள்ளனர்.

இதனை கண்டு மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பின்னர் இதுகுறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.