இந்தியா

பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

Summary:

youngman killed by unknown person

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ஜைனீஸ் படேல். இவர்  நள்ளிரவில் 12.15 மணியளவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை கத்தியால் குத்தியுள்ளார். 

இதனை சற்றும் எதிர்பாராத ஜைனீஸ் உடனே அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.ஆனால் அந்த நபர் விடாமல் துரத்திச் சென்று ஜைனீஷின் கழுத்து,  முதுகு மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த ஜைனீஸ் நடுரோட்டில் உதவி கேட்டு அலறிய நிலையில் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அதனைத் தொடர்ந்து சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஜிகி என்ற நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement