புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அண்ணியின் மீது தீராத மோகம்.! இடையூறாக இருந்த அண்ணன் படுகொலை.!
சத்தீஸ்கரில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தம்பி தனது அண்ணியின் மீது கொண்ட ஆசையினால் தனது அண்ணனை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்தா மாவட்டத்தில் இருக்கும் பங்கார் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சம் ஷாம். இவரது மூத்த மகன் பிர்சு ராம் (33 வயது) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பங்கார் கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அந்தக் குடும்பத்தின் இளைய மகனான பீம் சயாம் என்பவர் தனது அண்ணன் பிர்சு ராமின் மனைவியின் மீது காதல் கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்த மூத்த சகோதரர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இந்நிலையில் அண்ணியை அடைவதற்கு அண்ணன் இடையூறாக இருக்க கூடும் என்று கருதி அவரை கொலை செய்ய தம்பி முடிவு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அண்ணன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஆயில் மசாஜ் செய்வதாக கூறி அவரது தம்பி அவரது கருத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
தனது மூத்த சகோதரர் எதிர்பாராத விதமாக திடீரென இறந்து விட்டதாக கூறி தனது நெருங்கிய உறவினர்களிடம் கூறியுள்ளார். அவரது இறுதி சடங்குகளை செய்வதற்கு மும்முரம் காட்டி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் அதிகாரிகள் செய்த விசாரணையின் பேரில் தம்பி செய்த குற்றங்கள் அனைத்தும் அம்பலமாகின. அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.