ஸ்க்ரூ டிரைவரால் கண்களை குத்தி... பிளேடால் கழுத்தை அறுத்து... இளம்பெண்ணை குளத்தில் வீசிய ஒரு தலை காதலன்.!

ஸ்க்ரூ டிரைவரால் கண்களை குத்தி... பிளேடால் கழுத்தை அறுத்து... இளம்பெண்ணை குளத்தில் வீசிய ஒரு தலை காதலன்.!


young-woman-was-brutally-murdered-and-dumped-in-a-pond

தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல துடிக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன .

தெலுங்கானா மாநிலம் விகாபாரத் பகுதிக்கு அருகே உள்ள கல்லாப்பூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஸ்ரீஷா  22 வயதான இவ்வாறு செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் உள்ள அனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியாக ஸ்ரீசா இருந்து வந்தார்.

Telengana

ஸ்ரீசாவின் தந்தை அவரை தொலைபேசியின் மூலம் கிராமத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊர் திரும்பி இருக்கிறார் ஸ்ரீஷா.. அப்போதே வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருந்ததால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ஸ்ரீஷா. வீட்டிலிருந்து வெளியேறிய பெண் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தந்தை இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர் . இந்நிலையில் மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கண்களும்  குரு டிரைவர் ஆள் கொடூரமாக குத்தப்பட்டிருந்தன கழுத்து பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்தது. அப்போது ஸ்ரீசாவின் உறவினரான  அணில் என்பவரின் மீது சந்தேகம் அடைந்து அவரை கைது செய்து விசாரித்தது போலீஸ். அப்போது அணில்  காவல்துறையினரிடம் பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் தான் ஸ்ரீஷாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும்  பலமுறை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று அவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக இருந்தபோது ஆசைக்கு இணங்க  வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் பீர் பாட்டிலை உடைத்து அவரது வயிற்றில் குத்தி குரு டிரைவரால் கண்களில் குத்தி பிளேடால்  கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.