முதலமைச்சரை திடீரென தாக்கிய இளைஞன்.! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.! யார் அந்த இளைஞன்.?

முதலமைச்சரை திடீரென தாக்கிய இளைஞன்.! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.! யார் அந்த இளைஞன்.?


young-man-try-to-attack-bihar-cm

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரருக்கு மலர் தூவி மரியாதை செகுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாகதான் அந்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தச் சென்றார். முதல்வர் வருகையால் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நிதிஷ் குமார், ஷில்பத்ரா யாஜியின் சிலைக்கு மரியாதை செய்ய மேடைக்குச் சென்றார். மேடையில் குனிந்து மலர்களை எடுக்கும்போது, திடீரென மேடைக்கு ஓட்டிவந்த இளைஞர்  ஒருவர் முதல்வரை பின்புறமாகத் தாக்கினார்.

உடனடியாக மேடைக்கு வந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை மடக்கி இழுத்துச்சென்று அடிக்க முயன்றனர். அப்போது தடுத்த முதல்வர் நிதிஷ் குமார், இளைஞரை அடிக்காதீர்கள். அவர் அடித்ததற்கான காரணத்தை அவர் சொல்லட்டும் என்று கூறினார். பின்னர் காவல் துறையினர் இளைஞரை அழைத்துச் சென்றனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் முதல்வரைத் தாக்கிய இளைஞரின் பெயர் சங்கர் ஷா என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.