காரில் சாய்ந்த 6 வயது சிறுவன்.! இரக்கமின்றி எட்டி உடைத்து வாலிபர் செய்த மோசமான காரியம்.! வைரலாகும் பகீர் வீடியோ!!

காரில் சாய்ந்த 6 வயது சிறுவன்.! இரக்கமின்றி எட்டி உடைத்து வாலிபர் செய்த மோசமான காரியம்.! வைரலாகும் பகீர் வீடியோ!!


young-man-attack-6-year-child-video-viral

கேரளா மாநிலம் கன்னூர் அருகே தலசேரி என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த 6 வயது சிறுவன் எதார்த்தமாக கார் மீது சாய்ந்து நின்றுள்ளான். தனது காரில் சிறுவன் சாய்ந்து நிற்பதை பொறுத்துகொள்ள முடியாத அந்த வாலிபர் காரில் இருந்து இறங்கி வந்து அச்சிறுவனின் இடுப்பில் எட்டி உதைத்து விரட்டியுள்ளார். 

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் அதனை பொருட்படுத்தாமல் காரை எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு அரசியல் தலைவர்கள், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.

மேலும் எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளான அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் கார் உரிமையாளர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஷிஷாத் என்பவர் எனவும், அந்த 6 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  பிழைப்புக்காக கேரளா வந்துள்ள புலம் பெயர் தொழிலாளியின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.