செல்லமாக வளர்த்த நாய் உயிரிழந்த சோகத்தில் 20 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... கதறும் குடும்பத்தினர்!!Young girl committed suicide because her pet dog died

ஒரு சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் அலாதிய பிரியம் தான். எங்கு சென்றாலும் அதனை அழைத்து செல்வது அதனை குளிப்பாட்டி, சாப்பிட வைத்து ஒரு குழந்தையை போல் வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம். அதே போல் இளம்பெண் ஒருவர் செல்லமாக வளர்த்த நாய் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியைச் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்ற இளம்பெண் ஒருவர் செல்லமாக நாய் ஒன்றினை வளர்ந்து வந்துள்ளார். எந்த நேரமும் அந்த நாயை பற்றியே தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசி வந்துள்ளார். 

pet dog

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரிச்சா வளர்த்து வந்த நாய் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனால் பெரும் சோகத்தில் இருந்த ரிச்சா யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார். நேற்று தனது அறைக்கு சென்ற ரிச்சா வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரிச்சா இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.