இரவில் பஞ்சரான டூவீலர்! சுவிட்ச் ஆஃப் ஆன போன்! பயத்தில் கதறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! கொலைநடுங்கவைக்கும் சம்பவம்!

இரவில் பஞ்சரான டூவீலர்! சுவிட்ச் ஆஃப் ஆன போன்! பயத்தில் கதறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! கொலைநடுங்கவைக்கும் சம்பவம்!


young-doctor-murdered-in-hydrabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் பிரியங்கா ரெட்டி. 25 வயது நிறைந்த இவர் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷம்சாபாத் என்னும் நகரில் இருந்து கச்சிபௌலி  என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் அதற்காக வீட்டிலிருந்து மாலை 5 மணியளவில் கிளம்பிய அவர் ஷம்சாபாத் டோல் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு,  அங்கிருந்து காரில் கச்சிபௌலிக்கு சென்றுள்ளார். 

பின்னர் இரவு 7 மணி அளவில் ஷம்சாபாத் பகுதிக்கு திரும்பிய அவரிடம் அங்கிருந்த லாரி டிரைவர் ஒருவர் உங்களுடைய வாகனத்தின் பின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. நான் சரிசெய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இரு சக்கர வாகனத்தையும் அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

doctor

இந்நிலையில் மாதிரி தனது சகோதரிக்கு போன் செய்து நடந்தவற்றை தெரிவித்துள்ளார். உடனே அவர் பிரியங்கா ரெட்டியை  டோலிற்கு அருகில் நிற்குமாறும், உடனே தான் வருவதாகவும்  தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அங்கு வந்து பார்த்தபோது பிரியங்கா ரெட்டி அங்கு இல்லை. மேலும் அவரது தோன்றும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இந்நிலையில் பதறிப்போன அவரது சகோதரி இது குறித்து தனது உறவினர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் அனைவரும் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் போலீசார் இரவு முழுவதும் தேடிய நிலையில் மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள அருகே சப்வே பகுதியில் எரிந்த நிலையில் பிரியங்கா ரெட்டியின் சடலத்தை காவலர்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.