இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பலி..!

Yesterday 507 people died by corona virus


Yesterday 507 people died by corona virus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்பு பலி எண்ணிக்கை குறைந்து இருந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் முதல் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோளை விடுத்து வருகிறது.

இதுவரை இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 17,400 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 507 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை  5 லட்சத்து 85 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

அதிலும் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டிய மாநிலம் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மராட்டியில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.