மக்களே உஷார்.. திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்.. விளக்கம் அளிக்காத மொபைல் நிறுவனம்..! காரணம்தான் என்ன?..!!

மக்களே உஷார்.. திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்.. விளக்கம் அளிக்காத மொபைல் நிறுவனம்..! காரணம்தான் என்ன?..!!


Xiaomi 11 lite ne 5g mobile explode in Bihar

ஸ்மார்ட்போனில் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து பல மாடல்களாக வெளியிடப்பட்டாலும் திடீரென அவை வெடித்து சிதறுவதாக வெளியாகும் செய்திகள் வாடிக்கையாளர்களையும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தைச் சார்ந்த சஞ்சீவ் ராஜா என்பவர் சியோமி 11 லைட் NE 5ஜி பயன்படுத்திய நிலையில், அதிலிருந்து திடீரென கரும்புகையானது வெளியேறி திடீரென வெடித்து சிதறியுள்ளது. 

இந்தியா

சார்ஜர் எதிலும் இணைக்கப்படாத போது இந்த சம்பவம் நடந்த நிலையில், இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக சியோமி நிறுவனம் எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.

மேலும் ஸ்மார்ட்போன் வெடிக்கும் போது கட்டிலில் வைக்கப்பட்டிருந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது வெடித்துச் சிதறிய சியோமி 11 லைட் NE 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த 2021 டிசம்பர் மாதம் வாங்கப்பட்டு இருக்கிறது.